திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் கம்பாளப்பட்டி கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் செஞ்சேரி புத்தூர் பகுதியில் உள்ள பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிக்கப்படாத காரணத்தால் உடுமலை பல்லடம் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் இதனால் இவ் வழியாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பாளப்பட்டி கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்
இல்லை என்றால் கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.