டெல்லி நகரில் எனக்கு வாழப் விருப்பமில்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இங்குள்ள மாசுபாட்டினால் எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும், டெல்லிக்கு வரும் போது, மாசு அளவு அதிகமாக இருப்பதால், போகலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைப்பதே காற்று மாசை குறைக்க சிறந்த வழி" என்று தெரிவித்துள்ளார்.