மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ் தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு. காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டு பேசும் மகாராஜா மனப்பான்மையிலிருந்து திமுக அமைச்சர்கள் வெளியே வர வேண்டும் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்கு சென்று படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என பாஜக MLA வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.