திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று விவசாயிகள் சங்கம் பேரவை கூட்டம் ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் வீரப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி ஆகியோர் உரையாற்றினார்கள்.
விவசாய விரோத ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து, நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கையை கண்டித்து, 8ம் தேதி கணியூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.