மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் FY25 வரை தமிழ்நாடு 9.36 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் 26.12 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் 39% பங்களிப்பை தமிழ்நாடு அளித்துள்ளது. கடந்த ஆண்டை விட (9.56 பில்லியன் டாலர்) இந்த ஆண்டு சற்று குறைவு என்றாலும் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தொடர்ந்து தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்கி வருகிறது.