தமிழகத்தில் தற்போது 8 சாலை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் நான்கு வழிச்சாலை பணிகள், ஆறு இடங்களில் 767 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. 70% பணிகள் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டிற்குள் அனைத்தும் முழுமைப் பெற்று சாலைகள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் - புதுச்சேரி இசிஆர் சாலை, திண்டுக்கல் பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை, நாகை தஞ்சாவூர் சாலைகள் இதில் அடங்கும்.