ராமநாதபுரம்: மேலப்பெருங்கரையில் இன்று நடக்க இருந்த பாண்டி - குஷியா காந்தி ஜோடியின் திருமணத்திற்கு மணமகன் வராததால் திருமணம் நின்றுள்ளது. திருமணத்தை இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு செய்திருந்தாலும், திருமணம் நடக்காது என மணமகன் வீட்டார் சமீபத்தில் கூறிய நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது சம்மதம் தெரிவித்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் இன்று திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை என மணப்பெண் மீண்டும் புகார் அளித்துள்ளார்.