கோவையில் சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசியபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் 54 வயது முதியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமச்சந்திரன், சனிக்கிழமை இரவு தனது போனுக்கு சார்ஜ் போட்டபோது அழைப்பு வந்ததால், சார்ஜில் இருந்து ஆஃப் செய்யாமல், போனை எடுத்து பேசியபோது விபத்து நடந்தது. போனை சார்ஜ் போட்டபடியே அவர் நீண்ட நேரம் பேசியதால், அது சூடாகி வெடித்ததாக கூறப்படுகிறது.