அரசு பள்ளிகளில், 'டிஜிட்டல் போர்டு'களையும், புதிய செயலிகளையும் பயன்படுத்தாத ஆசிரியர்களை கண்காணிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 20,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், மின்னணு திரைகளும், இணையதள வசதியும் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள், அவற்றை காட்சிப் பொருளாகவே வைத்துள்ளதாக, அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்த் தலைவர்கள், கவுன்சிலர்கள், பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அனுப்பி உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.