ஆஸ்திரேலியா: 17 வயது மகளை ஆபத்தான டயட் பழக்கத்தை பின்பற்ற வைத்து உடல் நலத்தை பாழாக்கிய பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் அச்சிறுமி பார்ப்பதற்கு 9 வயது போல இருக்கிறார். சிறுமி கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதை கண்டு திகிலடைந்த மருத்துவர்கள் அவரை 'நடமாடும் எலும்புக்கூடு' போல இருப்பதாக விவரித்தனர். கைதான சிறுமியின் பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.