மதுரை: திருப்பரங்குன்றத்திற்கு தடையை மீறி செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று (பிப்.,4) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகக் காரைக்குடியிலில் இருந்து, ஹெச். ராஜா திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.