சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலிருந்து யாரையாவது நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார். எனவே என்னை பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.