திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி மின்
கட்டண உயர்வை கண்டித்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரபடி முன்னாள் அமைச்சரும்
உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை. கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் கஞ்சா மற்றும் மது போதை பிடியிலிருந்து கல்லூரி மாணவர்களை காப்பாற்றுவோம்.
வேதனையாச்சி வேதனையாச்சு விடியா தி. மு. க ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சு.
கெட்டுப் போச்சு கெட்டுப் போச்சு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு. ஏறிப்போச்சு ஏறிப்போச்சு மின் கட்டண வரி சொத்து வரி ஏறி போச்சு.
சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசே ஸ்டாலின் அரசே பதவி விலகு என கூறி கண்டன கோஷங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தி கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.