திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு துவானம் காந்தளூர் போன்ற பகுதிகளில் தற்சமயம் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்சமயம் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து நீர்வரத்து வினாடிக்கு 3421 கன அடியாக வந்து கொண்டுள்ளது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி பிரதான மதகுகள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக உபரி நீர் 3715 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது மேலும் கரையோர கிராமங்களான கல்லாபுரம் ருத்ராபாளையம் மடத்துக்குளம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 88. 78 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது