திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்க வாசல்) நாளை ஜனவரி 10ஆம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்படவுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை ஜனவரி 10ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.