திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில், போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர் ஒருவரிடம் இருந்து ரூ.30,000 பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. அவர் அணிந்திருந்த வேட்டியை கிழித்து, பாக்கெட்டில் இருந்த பணம் திருடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.