பிரதமர் மோடியால் 2019ஆம் ஆண்டு PM கிசான் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டப் பலனை பெறுவதற்கு, விவசாயிகள் புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு, டிஜிட்டல் ஐ.டி. கட்டாயம் எனவும், ஆதலால் விவசாயிகளுக்கு அதனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.