ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க வேண்டாம் - போக்குவரத்துத்துறை

79பார்த்தது
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க வேண்டாம் - போக்குவரத்துத்துறை
பொங்கல் பண்டிகையையொட்டி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்க வேண்டும். வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றியமைக்க வேண்டும்" என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி