உடுமலை நகராட்சியை கண்டித்து சங்கு ஊதூம் போராட்டம்

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை - பழனி சாலையில் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிதியின் கீழ் ரூ. 4 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் அருகில் யசோதா ராமலிங்கம் லே-அவுட்டை இணைக்கும் பாதையை பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதால் இந்த பாதையை மறைத்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

எனவே பல ஆண்டு காலமாகமாக பயன்படுத்தும் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் பாதை திறக்கப்படவில்லை. மேலும் கழுத்தறுத்தான் ஓடையை அழித்து வீட்டு மனை உருவாக்கி இருப்பதை கண்டித்தும் இன்று(செப்டம்பர் 11) நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐஎம் சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் நிர்வாகிகள் பாலதண்டபாணி, பஞ்சலிங்கம், செல்வராஜ், தோழர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி