உடுமலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!!

1579பார்த்தது
உடுமலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் கபூர் கான் வீதியும் அடங்கும். ராஜேந்திரா சாலையுடன் இணையும் இந்த சாலையில் உழவர் சந்தை, ரயில் நிலையம், உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்து உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதி திடீரென நின்றது. இதனால் அதற்கு பின்னால் வந்த கார் நிலை தடுமாறி முன்னாள் இருந்த காரின் மீது மோதியது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்த விபத்தால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் காரில் பயணித்த டிரைவர் மற்றும் ஒரு பெண்ணும் லேசான காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாததும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி