தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வது தவறான நடவடிக்கை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "தேர்தல் ஆணைய நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கு 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வது தவறான நடவடிக்கை" என்று தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.