திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் முருக பக்தர்களுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பக்தர்களின் நலன் கருதி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, (சன்செட்) நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். கோடை வெயில் காலம் தீவிரமடையவுள்ள நிலையில் நிழற்குடை அமைத்துள்ளதோடு, மோர் வினியோகமும் நடைபெறுகிறது.