தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

53பார்த்தது
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ஆம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, கோவை, சென்னை, விழுப்புரம், திருச்சி, நெல்லை என 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி