நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிவர்டன் நகரத்தில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நியூசிலாந்தின் அவசரகால மேலாண்மை நிறுவனம், நிலநடுக்கம் நாட்டை பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.