டூ வீலரில் ஹாயாக பயணம். பேலன்ஸ் தவறாமல் அமர்ந்து சென்ற டேனி.

76பார்த்தது
திருப்பூர். டூ வீலரில் ஹாயாக பயணம். பேலன்ஸ் தவறாமல் அமர்ந்து சென்ற டேனி.

திருப்பூர் அனுப்பர் பாளையம் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் சித்ரா. இவர் ஆசையாக வளர்த்து வரும் நாய் டேனிக்கு 6 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சித்ரா தனது கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க மார்கெட் செல்வது வழக்கம். சித்ராவை விட்டுப் பிரியாத அவரது செல்ல நாய் டேனி, அவரது இரு சக்கர வாகனத்தின் பின் சீட்டில் தானாகவே ஏறி அமர்ந்து சமர்த்தாக உடன் பயணிக்கிறது.

சாலைகளில் செல்லும் வாகனத்தின் பின் சீட்டில் ஆடாமல், அசையாமல் அழகுற பயணிப்பது காண்போரை அதிசயமாக பார்க்கும் வகையில் உள்ளது. சிக்னல்களில் வண்டி நின்றால் ஆடாமல், அசையாமல் அமர்ந்திருக்கும் டேனி. வாகன இன்ஜினை ஆப் செய்தால் மட்டுமே வாகனத்தை விட்டுக் கீழே இறங்குகிறது.
திருப்பூர் நகரில் வாகனத்தில் டேனி அமர்ந்து செல்வதை வாகன ஓட்டிகள், குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி