உரிய ஆவணங்களோடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாகனங்களை விடுவிக்க வேண்டும் என ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி பருமுதல் செய்வதாகவும் சுகுமார் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் தாராபுரம் நாகம்பாளையம் பகுதியில் இருந்து காவல் கொண்டு சென்ற பொழுது நல்லூர் பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்ததாகவும் அப்பொழுது உரிய ஆவணங்கள் இருந்த போதும் பர்மிட் இல்லை எனக் கூறி நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் உரிய ஆவணங்கள் கையில் இருந்த போதும் வழக்கு பதிவு செய்து தங்கள் வாகனத்தை பறிமுதல் செய்ததை மறுபரிசீலனை செய்து வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கோரி ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.