ஊத்துக்குளி-காங்கயம் சாலையில் உள்ள வேலம்பாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த வர் ராசன் (வயது 76). இவர் தனது இருசக் கர வாகனத்தில் கொடியம்பாளையம் நால் ரோடு பகுதியில் இருந்து செங்கப்பள்ளி நோக்கி பூசாரிபாளையம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ ருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட் டது. இதில் பலத்த காயமடைந்த ராசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந் தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.