ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் வெற்றியிலும் பணியாளர்களின் மனநலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான மனநலப் பராமரிப்பு இல்லாத இடத்தில் பணியாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி பிரச்னை உருவாகலாம். இதுபோன்ற மனநலப் பாதிப்புகள், நிறுவனத்தில் உற்பத்தியைப் பாதிப்பதுடன் பணித்திறனையும் பாதிக்கும். அதனால் பணியாளர்களை மன அழுத்தத்தில் தள்ளாதபடி கவனிக்க வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உள்ளது.