துரியன் பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் இதயம் பலமாவதோடு புற்றுநோயின் அபாயம் குறைகிறது. பெண்கள் கருவுறாமல் போவதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் உள்ள குறைபாடு காரணமாக இருப்பதால், இந்த பழம் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். துரியன் பழம் பாலுணர்வு தூண்டியாக செயல்படுகிறது. ஆண்களுக்கு பாலியல் உந்துதலை அதிகரித்து விந்தணுவை மேம்படுத்தி மலட்டுத்தன்மையை போக்கும் ஆற்றல் கொண்டது.