பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து

1910பார்த்தது
பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து
மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட கே. எஸ். ஆர். நகர்பகுதியில் அம்பிகா என் பவர்களுக்கு சொந்தமான பனியன் வேஸ்ட் குடோன் உள் ளது. இப்பகுதியில் செயல்படும் பனியன் நிறுவனங்களில் இருந்து பனியன் வேஸ்ட் துணிகளைசேகரித்து குடோனில் இருப்பு வைத்துள்ளனர். மேலும் இங்கு பனியன் வேஸ்ட்துணிகளை அரைத்து பஞ்சாக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது. மாலை தொழிலாளர்கள் பனியன் வேஸ்ட் துணிகளை அரைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த னர். அப்போது எதிர்பாராத விதமாக வேஸ்ட் துணிகளில் தீப் பிடித்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியது. குடோனில் இருந்த அனைத்து துணிகளும் தீப்பற்றி எரிந்த தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து உடனடியாக ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் திருப்பூரில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டி கள் வரவழைக்கப்பட்டது. இவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணிகள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பீலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகியது. இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி