சவுக்கு சங்கர் வீட்டில் அராஜகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் சிலர் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது என கூறியுள்ளார்.