தண்ணீர் திருட்டை தடுக்கவும் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

78பார்த்தது
தாராபுரம் உப்பாறு அணை சார்ந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் கணக்கில் விவசாய பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேறக்கூடிய உபரி நீரை உப்பாறு அணைக்கு திருப்பிவிட வலியுறுத்தி கடந்த 19 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்றைய தினம் செல்போன் கோபுரத்தில் ஏறி ஏழு மணிநேர போராட்டத்தையும் மேற்கொண்டனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று திருப்பூர் ஆட்சியரிடம் நேரடியாக தங்களது கோரிக்கை தொடர்பாக சந்திக்க வந்தனர். அப்போது பிஏபி வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் திருட்டு நடைபெற்று வரும் நிலையில் அந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்காததாலாயே தங்களது வாழ்வாதாரமாக உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை, என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் தண்ணீர் திருட்டை தடுத்து உப்பாறு அடக்கி தண்ணீர் வரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது கோரிக்கை தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் அறிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you