டிவி திரை அல்லது செல்போன் திரை போன்ற எந்தவித டிஜிட்டல் திரையும் பார்க்க 2 வயது குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே டிவி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலன் கருதி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.