விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

70பார்த்தது
திருப்பூர் அருகே மூன்று அம்ச கோரிக்கைகளை வலயுறுத்தி விவசாயிகள் 13 பேர் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!

தமிழக முதல்வர் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி. , நியாய விலை கடைகளில் மானிய விலையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் - நிலக்கடலை எண்ணெய் விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும். ,
மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்யும் கொப்பரை தேங்காய்களை பாரத் கோகனட் ஆயில் என்கிற பெயரில் மாற்றி விற்பனை செய்யப்படும் என்கிற கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். ,
இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும் சட்ட விரோதமாக மனை உரிமையாளர்களின் நிலங்களை அபகரிப்பதை தடை செய்து. , கர்நாடகா. , ஆந்திரா போன்ற மாநிலங்களை போல சட்ட திருத்தம் செய்து, நில உரிமையை தமிழக முதல்வர் உறுதி செய்திட வேண்டும், உள்ளிட்ட. ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம் பகுதியில் *தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர உட்பட 13 விவசாயிகள் இன்று மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி