திருச்சிக்கு ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை

78பார்த்தது
திருச்சிக்கு ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அதை ஈடு செய்ய ஜூன் 8 வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.