நடு ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால் ஆபத்து

78பார்த்தது
நடு ரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால் ஆபத்து
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகாமையில் 2 பெரிய மாநகராட்சி பள்ளிகள் மற்றும் காதர் பேட்டை, ஆகியவை இருப்பதாலும், ரெயில் நிலையத்திற்கு அதிக வாகனங்கள் வந்து செல்வதாலும் இந்த பகுதி எப்போதும் பரப ரப்பாக காணப்படும். மாநகரில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இது மிகவும் பிரதான பஸ் நிறுத்தமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக் கான பயணிகள் இங்கிருந்து பஸ் ஏறி செல் கின்றனர்.
இதேபோல் பள்ளி நாட்களில் மாணவ- மாணவிகளும் ஆயிரக்கணக்கானோர் செல் கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் முறையாக நிறுத் தப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் ரோட்டின் நடுவே நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் இங்கு பஸ் ஏறி வருகின்றனர்.
விபத்து அபாயம்பஸ்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நிறுத்தப்படுவதால் பஸ் எங்கு நிற் குமோஎன பயணிகள் குழப்பமடைகின்றனர். இதேபோல் சில நேரங்களில் ஒரே நேரத்தில் | அதிக பஸ்கள் போட்டி போட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நடுரோட்டில் பஸ்கள் நிற்பதால் பிற பஸ்கள் மற்றும் ரோட் டில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் பயணிகள் பஸ் ஏற வேண்டிய அவலநிலை உள்ளது.

தொடர்புடைய செய்தி