7 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி கலெக்டர் அறிவிப்பு

63பார்த்தது
7 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி கலெக்டர் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்த உள்ளனர். பொதுமக்கள், அமைப்புகளால் அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் தயாரித்து வைக்க வேண்டும்.

இதுபோன்ற சிலைகளை மட்டுமே கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சாமளாபுரம் குளம், ஆண்டிப்பாளையம் பி. ஏ. பி. வாய்க்கால், பொங்கலூர் பி. ஏ. பி. பிரதான வாய்க்கால், எஸ். வி. புரம் வாய்க்கால், கணியூர் அமராவதி ஆறு, கெடிமேடு பி. ஏ. பி. வாய்க்கால் ஆகிய 7 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். காவல்துறையால் அனுமதிக் கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வ லமாக கொண்டு செல்ல வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி