கொலை செய்து விடுவதாக மிரட்டும் நபர்கள் மீது வழக்கு

71பார்த்தது
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த இப்ராகிம் பாதுஷா என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மக்கள் ஜனநாயகம் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது கட்சியில் பொறுப்பு வகித்த வேல்முருகன் என்பவர் ஆன்லைன் மோசடி உள்ளிட்டவற்றின் மூலம் பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். வேல்முருகனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் உதவி புரிந்ததாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 49 வழக்குகள் மற்றும் இரண்டு குண்டாஸ் உடைய சரவணன் என்பவரை வைத்து தனக்கு தொலைபேசி மூலம் இரண்டு கிலோ வெடிபொருள் வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் , இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இருவரும் திருப்பூரில் சுற்றி வரக்கூடிய நிலையில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு , வெடிபொருட்கள் வைத்திருப்பதாக அச்சுறுத்தல் விடுத்து வரும் சரவணன் மீது என். ஐ. ஏ விசாரணைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வடக்கு காவல் நிலையத்தில் மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் இப்ராகிம் பாதுஷா இன்று புகார் அளித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி