ரத்தம் உறைதல் நோய் தடுப்பு மருந்து தட்டுப்பாடு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில் ஹீமோபீலியா எனும் இரத்த உறைதல் குறைபாட்டு நோய் பாதிப்பில் 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்,
ரத்தஉறையாமைகுறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர் சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர்காக்கும் மருந்தான உறை காரணிகள்
பேக்டர் 7, பேக்டர் 8, பேக்டர் 9, ஆகியவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,
அருகில் உள்ள மற்ற மாவட்ட மருத்துவமனையில் இந்த மருந்துகளை பெற்று அதனை மருத்துவமனைக்கு வரவழைத்து தொடர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்எனபாதிக்கப்பட்ட நபர்கள்மாவட்ட மருத்துவமனைநிர்வாகத்திற்கு தெரிவித்தும்எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ரத்தக்கசிவு ஏற்படும்போதெல்லாம் இத்தகையஉறைகாரணி மருந்தைஊசிமூலம் செலுத்த வேண்டும்ஒருமுறைமருந்து செலுத்தினால்8மணி நேரம் முதல்10மணிநேரம் வரை மட்டுமேஅந்தமருந்து வேலை செய்யும் அதற்குள்ரத்தக்கசிவு சரியாகவில்லைஎன்றால் மறுபடியும்ஊசிமூலம் மருந்து செலுத்தவேண்டும் இந்த மருந்தின்நிலையானது ஆறாயிரம்முதல் 20 ஆயிரம் வரைவிற்கப்படுகிறது,
ஆகவேஇந்த ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட10க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தங்களுக்கு தொடர் சிகிச்சை பெற மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி