பாசிச ஆர் எஸ் எஸ் கூட்டு கொள்ளை ஆட்சியை தோற்கடிக்க ஆலோசனை

70பார்த்தது
திருப்பூர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தொமுச தொழிற்சங்க பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தொமுச தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் தோல்வி அடைய வேண்டும் என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் , தொழிலாளர்களின் வாக்கு வங்கியை பயன்படுத்தி பாசிச ஆர் எஸ் எஸ் கூட்டு கொள்ளை ஆட்சியை தோற்கடிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நமது உரிமைகளை பெறவும் உரிமைகளை நிலை நாட்டவும் தன்மானத்தோடு வாழவுமான ஆட்சியை கொண்டுவர தொமுச தொழிற்சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வருகின்ற தேர்தலில் மத்திய அரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது, வைப்பு நிதி பென்ஷன் தொகையை அதிகப்படுத்துவது, இ எஸ் ஐ வசதிகளை செய்து கொடுப்பது, அமைப்புசாரா வாரியத்திற்கு நிதிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிக்கு முன் வைக்க இருப்பதாகவும் பேட்டி அளித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி