மனைவி குறித்து தவறாக பேசியதால் வெட்டி கொலை செய்தநண்பன்கைது.

68பார்த்தது
திருப்பூர் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (40), இவர் அதே பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது நண்பர் முத்துராஜா (39) என்பவருடன் மது அருந்த நல்லூர், எம் ஆர் ஜி நகர் பகுதியில் உள்ள வடிவேல் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மூன்று பேரும் மது அருந்திக் கொண்டிருந்த போது முத்துராஜாவின் மனைவி குறித்து கார்த்தி தவறாக பேசியதாக கூறப்படுகிறது மது போதையில் இருந்த இருவருக்கும் வாய் தகராறு முற்றிய நிலையில் கார்த்திக் கொண்டு வந்திருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்த முத்துராஜா, கார்த்தியை சரமாரியாக வெட்டினார் இதில் ரத்த வெள்ளத்தில் கார்த்திக் சரிந்து விழுந்த நிலையில் உடன் இருந்த நண்பர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து முத்துராஜாவை பிடித்து, கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் முத்துராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி