280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

61பார்த்தது
280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளால் கடந்த 2 மாதங்களாக நடக் காமல் இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெ றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்ப டுகிறது. நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட் டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி வேண்டியும் 280 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் ஜெய்பீம், திட்ட இயக்குனர் சாம் சாந்தகு மார், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர்செல்வி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி