காவல்துறை சார்பில் நடைபெற்ற மகளிர்கான மாரத்தான்

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைப்பெற்றது. இந்த மாரத்தான் போட்டியை திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் க்ரீஸ் அசோக் யாதவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் 50 மேற்பட்ட மகளிர் காவலர் உட்பட 100க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மங்கலம் சாலை வழியாக சென்று தெற்கு பாளையம் பிரிவில் திரும்பிய பின்னர் மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் நிறைவு பெற்றது. மேலும் இந்நிகழ்வில் பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள மகளிர் உதவி எண் 181 என்ற இலவச காவல் கட்டுபாட்டு எண்ணை அறிமுகப்படுத்தினார். ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்த போட்டியாளர்களுக்கு பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் பரிசு வழங்கினார். மேலும் இந்நிகழ்வின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காம நாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல் மற்றும் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி