சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.