சர்வதேச பெண்கள் தினத்தில் வந்தே பாரத் ரயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கி வரும் நிலையில் அவர்களுக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் ரயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி - சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலை பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் இயக்கினார்.