நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் உள்ளூர் சேனலில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது. அப்போது டிவி பார்த்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆபாச படம் ஒளிபரப்பான சேனல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன், சம்பந்தப்பட்ட சேனலை தொடர்புகொண்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.