சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, கேக் வெட்டி பெண் நிர்வாகிகளுக்கு பகிர்ந்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு குவிந்த பெண் தொண்டர்கள், சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர்.