பொங்கலூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

55பார்த்தது
பொங்கலூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது
இயற்கையின் படைப்புகளில் ஏராளமான அதிசயங்கள் உண்டு. அதில் மலர்களில் பல வண்ணங்கள் அப்படிப்பட்ட மலர்களின் பகலில் பூக்கும் மலர்கள், மாலையில் மலரும் மலர்கள், இரவில் மலரும் மலர்கள் என பல்வேறு வகை உண்டு. அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் மட்டுமே மலர்கின்ற மலர்களை அதிசயமாக பலரும் பார்ப்பதுண்டு.

அந்த வகையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் என்ற பூ தற்போது பல்வேறு இடங்களில் பூக்கத் தொடங்கியுள்ளது. இந்த பூக்கள் பெரும்பாலும் மலைப்பகுதியில் மட்டுமே பூக்கக்கூடியது. இதனை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வைத்து வளர்த்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பிரம்ம கமலம் தற்போது ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலும் பூக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பூ பொங்கலூர் பகவான் நகரில் உள்ள நிர்மலாதேவி என்பது வீட்டில் பூத்துள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஒருநாள் இரவு மட்டுமே அந்த பூ பூத்து பின்னர் வாடி விடும் என்பது இதில் உள்ள சிறப்பம்சமாகும். அப்படி பூக்கும் பூக்களுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுவதும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி