பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் சின்ன வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இதுகுறித்து சின்ன வெங்காய விவசாயி வேலுமணி கூறும்போது "பருவ நிலை மாற்றத்தால் சின்னவெங்காயம் விளைச்சல் குறைந்துள் ளது. மேலும் கிலோ ஒன்றிற்க்கு ரூ. 30 முதல் ரூ. 40 வரை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் வெங்காய விவசாயத்தில் போட்ட முதலீடு திரும்ப கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார். இது குறித்து விவசாயி தங்கவேல் கூறும்போது வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்" என்றார். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறும்போது "மத்திய அரசு பெரிய வெங்கா யத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடைகளையும், வரிகளையும் விதித்து சின்ன வெங்காய விவசாயிகளை வஞ் சித்து வருகிறது. சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்கா யத்திற்கு தனித்தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண் டும். மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காயத்தை கொள்மு தல் செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும்" என்றார்.