பல்லடம் கொலை வழக்கு 2 பேர் கைது. புகையிலை தராததால் ஆத்திரம்

82பார்த்தது
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவர் பல்லடம் குன்னங்கள் பாளையம் பிரிவு அருகே பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் கேளிக்கை விடுதி அருகே தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அங்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் பூபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். சேகாம்பாளையம் செல்லும் சாலையில் 2வர் சந்தேகத்திற்கு இடமாக பதுங்கி இருப்பதாக தணிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்று போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விஜய் 22, ஈரோட்டை சேர்ந்த சரவணன் 30 என்பது அவர்கள்தான் பூபாலனை கொலை செய்தது தெரியவந்தது. இருவரும் கேளிக்கை விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும்போது அங்கு வந்த பூபாலிடம் புகையிலைப்பொருட்கள் கேட்டதாக தெரிகிறது ஆனால் புகையிலை கொடுக்க மறுத்ததால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஜய், சரவணன் அருகில் இருந்த கல்லை எடுத்து பூபாலனின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்ததாக தெரிவித்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி